28 தொகுதிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள ஆம் ஆத்மிகட்சி ஆட்சியமைக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:-

கடமை மற்றும் பொறுப்புகளை ஏற்கதயங்குவதாக அனைவர் மீதும் குற்றம்சுமத்திய ஆம் ஆத்மிகட்சி, அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அரசியலின் ஒரு பகுதியாகவே ஆட்சி உள்ளது.

காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தர முன் வந்துள்ள நிலையில், கட்டாயம் ஆம் ஆத்மிகட்சி டெல்லியில் ஆட்சி நடத்த வேண்டும். மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றி காட்ட வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவை ஊழல் கட்சிகள் என்று கூறுகிற போது, அன்னா ஹசாரேவிற்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம்குறித்து எண்ணிப்பார்க்க வேண்டும். அன்னாஹசாரே உங்களிடமிருந்து விலகியுள்ள போது, அங்கு என்ன நடக்கிறது என்று நாடு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply