மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கும்வரை இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களுக்கு எந்ததீர்வும் கிடைக்காது. பாஜக ஆட்சி வந்தால்தான் நிரந்தர தீர்வு ஏற்படும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவிலில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமிதரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அமெரிக்கா சென்றபோது அவரை சோதனை செய்தனர். அப்போது இதனை இந்தியா கண்டித்திருந்தால் தற்போது இந்தியாவின் துணைதூதர் தேவயானிக்கு இந்நிலை ஏற்பட்டு இருக்காது.

நாடாளுமன்ற தேர்தலை மனதில்வைத்து இந்த சம்பவத்தை காங்கிரஸ் கண்டித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடியின் தலைமையில் வலுவானகூட்டணி அமையும் மத்தியில் மோடி பிரதமர் ஆவார். தமிழகத்தில் அப்போது மின்வெட்டு பிரச்சனை இருக்காது.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்ககூடாது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கும்வரை இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களுக்கு எந்ததீர்வும் கிடைக்காது. எங்களது ஆட்சி வந்தால்தான் நிரந்தர தீர்வு ஏற்படும். வாஜ்பாய் ஆட்சியில் அவர் விலை வாசியை ஏறாமல் பார்த்துகொண்டார்.

தமிழகத்திற்கு மத்திய அரசின் மின்தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கவேண்டும் மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கும்வரை எந்தபிரச்சினையும் தீராது. குஜராத் மாநிலத்தை மத்திய அரசு வஞ்சித்தாலும் அதனை மீறி குஜராத் அரசு சாதித்துள்ளது. அங்கிருந்து தான் 16 மாநிலத்துக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார்.

Leave a Reply