பாஜக. பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி நல்ல மனிதர், மாநில வளர்ச்சியில் அக்கறைகொண்டவர் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

டைம்ஸ்ஆப் இந்தியா நாளேட்டுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி சிறப்புபேட்டி அளித்துள்ளார். அதில் அவர் நரேந்திர மோடி குறித்து தெரிவித்ததாவது;

நரேந்திரமோடியை பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்து அவர் நல்லமனிதர். தனது மாநில வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறவர். நல்ல நிர்வாகி என்பது நிரூபித்திருப்பதால்தான் மூன்று முறை அவர் மக்களால் மீண்டும்மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இருப்பினும் நாட்டை ஆள்வதற்கு அவர் தகுதியானவர் தானா என்பதை வாக்காளர்களே முடிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply