ஏழ்மை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, பாதுகாப்பு இவற்றை நரேந்திரமோடி ஒருவரால் மட்டுமே வழங்கமுடியும் என்பதை நாட்டுமக்கள் தெளிவாக புரிந்துவைத்துள்ளனர் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது :

தற்போது நடந்துமுடிந்த 5ந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலை பெற்றது. இந்தமுடிவுகள் இந்தியாவில் பாஜக. வலிமையாக இருப்பதையே காட்டுகிறது.

இந்தியாவில் ஏழ்மை மற்றும் வறுமையிலிருந்து தேசமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. ஏழ்மை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, பாதுகாப்பு இவற்றை நரேந்திரமோடி ஒருவரால் மட்டுமே வழங்கமுடியும் என்பதை நாட்டுமக்கள் தெளிவாக புரிந்துவைத்துள்ளனர். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. கூட்டணிகட்சிகள் அமையும் சூழலுக்கு ஏற்ப இதில் மாற்றம்வரும். பாஜக தலைமையில் அமையும் தேர்தல் கூட்டணி சக்திவாய்ந்த கூட்டணியாக இருக்கும். தமிழகத்தில் தற்போது நிலவும் மின்வெட்டு, மீனவர்பிரச்னைகள் குறித்தும், இலங்கை தமிழர் பிரச்னைகள் குறித்தும் நாங்கள் நன்கு அறிவோம். இவை முக்கியபிரச்னையாக எடுத்து கொள்ளப்படும். குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சம உரிமை கிடைக்கவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக உள்ளது.

இந்தவிஷயத்தில் எங்கள்கட்சி எப்போதும் துணைநிற்கும். அதேநேரத்தில் இலங்கையை நட்பு நாடாகவும் ஏற்றுக்கொள்வோம் என்றார் அவர்.

Leave a Reply