நாடுமுழுவதும் பிரசாரம் செய்துவரும் பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று மும்பையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் . சிறு வயதில் மோடி டீ கடை நடத்தியதால் இந்தகூட்டத்தில் டீ கடை நடத்தும் நபர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி இன்று மும்பையில் பிரசாரம்செய்கிறார். இந்த கூட்டத்தில் ஆயிரக் கணக்கான மும்பையில் உள்ள டீகடைக்காரர்கள் பங்கேற் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கென சிறப்புகூட்டம் நடக்கும் மைதானத்தில் தனியிடம் ஒதுக்கியிருப்பதாக மகாராஷ்ட்டிர மாநில பாஜக., தலைவர் தேவேந்திரா பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மோடிபிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக மும்பையில் நடக்கும்கூட்டத்தில் பங்கேற்கிறார். அவருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதால் இங்கு 7 கட்டபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதா மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால்சிங் கூறினார்.

Leave a Reply