ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஒரு வெத்து வேட்டு. நரேந்திர மோடியை விமர்சனம் செய்வதின்மூலம் ஆதாயம் அடைய பார்க்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ராஞ்சியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

பாஜக ஒரு மதவாதக்கட்சி. அதன் ஆதரவாளர் நரேந்திரமோடி என்று சமிபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த லாலு பிரசாத் கூறினார். பொதுவாக மோடியை விமர்சனம்செய்வது தற்போதைய அரசியல் போக்காகவே உள்ளது. அதனால், பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்களும் மோடியைப் பற்றி விமர்சனம்செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது லாலுபிரசாத் யாதவும் இணைந்துள்ளார் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

Leave a Reply