காங்கிரஸ் கட்சியினர் ஊழலில்திளைக்கும் நிலையில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஊழலுக்கு எதிராக பேசுவதாக, நரேந்திரமோடி சாடியுள்ளார்.

மும்பையில் ‘மகாகர்ஜனா’ என்ற பெயரில் பா.ஜ.க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பத்து லட்ச்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் அதில் பங்கேற்றுப்பேசிய நரேந்திரமோடி,
குஜராத்திகளுக்கு 2வது வீடு மகாராஷ்ராடிராவே. நாம்சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் கட்சியேகாரணம். இந்தியாவில் காஙகிரஸ்கட்சி இல்லாத நாடாக மாற்ற மும்பைமக்கள் குரலெழுப்ப வேண்டும்.”காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் (ராகுல்காந்தி) பேச்சை கேட்டேன். அவர் ஊழலுக்கு எதிராகப்பேசினார். அவரது கட்சியினர் தான் ஊழலில் திளைக்கிறார்கள். உண்மை நிலை அப்படியிருக்க, அவரதுபேச்சை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆதர்ஷ்குழுவின் அறிக்கை, அமைச்சர்களை சுட்டிக் காட்டுகிறது. ஆனால், காங்கிரஸ் அரசோ தனது ஊழல்கறை படிந்த தலைவர்களை காக்கும்வேலையில் ஈடுபடுகிறது. காங்கிரஸ்சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்பது தெளிவாகிறது.

காங்கிரஸ்கட்சி பிரித்தாளும் கொள்கையுடன் நாட்டை ஆள்கிறது , அக்கட்சி தொடர்ந்து வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது , காங்கிரஸ் இல்லாத ஆட்சியை வரவேற்க நாட்டுமக்கள் தயாரக உள்ளனர்.

“வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப்பணத்தை மீட்பதில் காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால், மூன்றே ஆண்டுகளில் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டுவரும்.

அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்டுவந்தால், இந்தியாவில் வறுமை இல்லாத நிலையை ஏற்படுத்தமுடியும், காங்கிரஸ் அரசு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிசெய்து வருகிறது , அப்பிரிவினையை ஆங்கிலேயர்களிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொண்டது.

காங்கிரஸ் ஆட்சியில் சாமானியமக்கள் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளனர், நாட்டில்நிலவும் முக்கிய பிரச்சினைக்கு காங்கிரஸ் அரசேகாரணம் என்று மோடி குற்றம்சாட்டினார்.

டீ விற்பனையாளர்கள் (மோடியை மனதில்வைத்து) எல்லாம் நாட்டை ஆளக் கூடாது என சமாஜ்வாதி உறுப்பினர் கூறியதை அம் மாநிலத்தில் வாழும் டீகடையாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 10000 டீ கடையாளர்கள் விரும்பியதையடுத்து, அவர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் மோடிக்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதுடன், மைதானத்தில் 5000 காவலர்களைகொண்ட பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

Leave a Reply