வரும் 2014 பாராளுமன்றதேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். இதை பூமியில் உள்ள எந்தசக்தியாலும் தடுக்கமுடியாது என்று பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை மோடியின் மகா கர்ஜனை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது. மக்கள், மத்தியில் மாற்றம்வேண்டும் என்று கூறிவருகின்றனர். மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று நான்நினைக்கிறேன். மத்தியில் ஆளும் காங்கிரஸ்க்கு எதிராக கடும் எதிர்ப்புள்ளது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால், உற்பத்திதுறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமும், இந்திய ரூபாயின்மதிப்பு உயரவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

டீவிற்றவர் பிரதமராக முடியாது என்று கூறுகிறார்கள். ஐஸ்கிரீம் விற்ற ஒபாமா அமெரிக்க அதிபராகும் போது, செய்தித்தாள் விற்ற அப்துல்கலாம் ஜனாதிபதியாகும்போது, மரம் வெட்டிக்கொண்டிருந்த ஆப்ரகாம் லிங்கன் அதிபராகும்போது ஏன் டீ விற்றவர் பிரமதராக முடியாது.

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதை காங்கிரசின் வெற்றி என்று கூறிக் கொள்கிறார்கள். பெருமளவில் ஊழல் புரிந்தவர்கள் எப்படி ஊழலுக்கு எதிரான மசோதாவுக்கு உரிமைகொண்டாட முடியும். லோக்பால் மசோதாவை நிறைவேற்றியதற்கு மூலகாரணம் அன்னா ஹசாரவே. அவர்தான் இந்தவெற்றிக்கு முழு தகுதியுடையவராவார். அன்னாவையே சிறைக்குள் தள்ளியவர்கள் காங்கிரஸ்காரர்கள் என ராஜ்நாத் சிங் ஆவேசமாக பேசினார்.

Leave a Reply