குஜராத்தில் நரேந்திர மோடி மது இல்லாமல் மாநிலத்தை வழிநடத்தி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து நரேந்திரமோடி பிரதமராகும்போது பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.என்று தமிழக பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் "தாலிகாக்கும் தாமரை மாநாடு" தக்கலையில் நடந்தது.

இதில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகம் 1950 முதல் 1969 வரை மதுயில்லாத மாநிலமாக இருந்தது. 1977க்கு பிறகு மதுக் கடைகள் உரிமம்பெற்று இயங்கி வந்தன. 2003ம் ஆண்டுமுதல் மதுக்கடைகளை அரசே ஏற்றுநடத்துகிறது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.21 ஆயிரம்கோடிக்கு மதுவிற்பனை நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் நடைபெறும் ஒட்டுமொத்த மது விற்பனையில் தமிழகம் பெரியளவில் பங்கு வகிக்கிறது. மது அருந்துவதால் குடும்பத்தில் ஏழ்மை ஏற்படுகிறது. பலர் நோயால் பாதிக்கப் படுகிறார்கள்.

மது அருந்தி வாகனம் ஓட்டிசெல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் இளம்வயதில் பெண்கள் கணவரை இழக்கும் நிலை உருவாகிறது. இதை தடுக்க, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

மதுவிற்பனை இல்லாவிட்டால் அரசின் வருமானம் பாதிக்கப்படும் என கூறுகிறார்கள். மாநில அரசுக்கு வருவாய் இல்லா விட்டால் மத்திய அரசு 50 சதவீதம் நிதி வழங்கவேண்டும்.

குஜராத்தில் நரேந்திரமோடி மது இல்லாமல் மாநிலத்தை வழிநடத்தி வருகிறார். உலக தமிழர்களின் பிரச்சினை தீர நரேந்திரமோடி பிரதமராக வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து நரேந்திரமோடி பிரதமராகும் போது பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும்.

குமரிமாவட்டத்தில் தக்கலையில் முதல் மாநாடு நடைபெற்று உள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநாடு நடைபெறும். அனைத்து மாவட்டங்களிலும் மாநாடு நடந்துமுடிந்த பிறகு, கடைசியில் தாலிகாக்கும் தாமரை போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply