குஜராத் முதல்வரும், பா.ஜ.க., பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியின் அரசியல் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில், அவரது இளம்வயது வாழ்க்கை திரைப்படமாகிறது . இப்படத்தை  இயக்குனர் மிதேஷ் பட்டேல் தயாரிக்கிறார் . குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த மிதேஷ் பட்டேல் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

சாதாரண டீ கடை நடத்தி பின்னர் அரசியலுக்குவந்து, படிப்படியாகமுன்னேறி மாநிலத்தின் முதல்வராக உயர்ந்தவர் மோடி. அவரது வளர்ச்சியால் கவரப்பட்ட மிதேஷ், அவரது வாழ்க்கைவரலாறை படம் எடுக்க திட்டமிட்டார். இதற்காக மோடியிடம் அனுமதியும்பெற்றுள்ள அவர், தயாரிப்பு வேலைகளில் மும்முறமாகியுள்ளார்.

இந்தநிலையில், இந்தப்படத்தில் நரேந்திர மோடியின் வேடத்தில் நடிப்பதற்கு பாலிவுட்நடிகர் விவேக் ஓபராயை இயக்குனர் அணுகியுள்ளனர்.

Leave a Reply