கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.க தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிறகு, எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது , “நாங்கள் பா.ஜ.க.,வில் இணைவதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். பாஜகவில் சேருவதற்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல் தந்துள்ளார் . இரண்டொரு நாள்களில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன்’ என்றார்.

Leave a Reply