நாடாளுமன்ற தேர்தல்வியூகம் குறித்து பாஜக தலைவர்கள் இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். பாஜக பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாஜக.வுக்கு ஆதரவுதிரட்டி வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெற்றது.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தல்வியூகம் மற்றும் நடப்பு அரசியல் நிலவரம்குறித்து விவாதிப்பதற்காக பாஜக தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. கட்சிதலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் இந்தகூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளன.

இதனை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு மோடி தலைமையில் கட்சியின் மத்தியதேர்தல் பிரச்சாரகுழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணிவேட்பாளர் தேர்வு, குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத்தெரிகிறது.

Leave a Reply