சர்தார் வல்லபாய் பட்டேல் முஸ்லிம்களுக்கு எதிரானவர்அல்ல என்று பாஜக. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக, தனது இணையதள ‘பிளாக்’கில் கருத்துதெரிவித்துள்ள அத்வானி, ‘சர்தார் வல்லபாய் பட்டேலை மதவாதிபோலவும், ஜவகர்லால் நேருவை மதச்சார்பற்றவர் போலவும் சித்தரிக்க சிலர் முயற்சிசெய்து வருகின்றனர்.

சர்தார் பட்டேலை பற்றி நான் நீண்டகாலமாக ஆய்வுசெய்த வகையில், அவர் முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்ற நச்சுக்கருத்து மக்களின் மனதில் வேண்டும் என்றே விதைக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது. மக்களின் மனதில் விதைக்கப்பட்ட இந்த தவறான கருத்து நிச்சயமாக நீக்கப்படவேண்டும்.

இதுதொடர்பான எனது பணியை திருப்திகரமாக நிறைவேற்றி யுள்ளதாகவே நான் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply