இந்திய திரு நாட்டின் (பாரத) ரத்தினமாக, அடல்பிகாரி வாஜ்பாய் உள்ளதாக, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 89 வது பிறந்தநாள் கொண்டாட்டம், நாடு முழுவதும், கட்சிதொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜ்நாத்சிங் கூறியதாவது, நாட்டின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு, பாரதரத்னா விருது வழங்கப்பட வில்லை என்ற பேச்சு அர்த்தமற்றது , பாரதத்தின் ரத்தினமாக உள்ள வாஜ்பாய்க்கு, பாரதரத்னா விருது, அவசியமில்லாத ஒன்று என அவர் கூறினார். விஞ்ஞானி சிஎன்ஆர்.ராவ் மற்றும் கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சமீபத்தில், பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்ட போது, வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply