கேஜ்ரிவால் மெட்ரோ ரெயிலில் ஆஃபீஸ் போகிறாராம். அரசாங்க வீடு வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். சிவப்பு விளக்குகள் கொண்ட கார்கள் கூடாது என்று சொல்லி விட்டாராம். தன் மந்திரிகளுக்கும் பங்களாக்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். தனக்கு பாதுகாவலர்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். நல்லது.

இதில் சில விஷயங்களை மட்டும் அனைத்து மாநில மந்திரிகளும் உறுப்பினர்களும் கடைப் பிடிக்க வேண்டும். முக்கியமாக இந்த சிவப்பு விளக்கு கலாசாரம். சிவப்பு விளக்குச் சுழல போகும் காரில் இருப்பது சிவப்பு விளக்கு சுந்தரிகளா அல்லது மந்திரிகளா? ஏன் இந்த வெட்டி பந்தாக்கள்? மேலும் மந்திரிகளுக்காக போக்கு வரத்து நிறுத்தப் படுவதும் குறைக்கப் பட வேண்டும்.

ஆனால் அரசாங்க வீடுகளை தவிர்ப்பது விளம்பரம் மட்டுமே. மந்திரிகளுக்கு தங்கள் அலுவல்களைச் செய்யவும் அதிகாரிகள் மக்களைச் சந்திக்கவும் கூடிய வசதிகளுடன் வீடுகளை அவர்களுக்கு அளிக்கிறார்கள். அது ஒரு குவார்ட்டர்ஸ் போன்றது. தாங்கள் குடியிருக்கும் வீட்டுப் பகுதிகளில் அவ்வளவு சந்தடிகளை வைத்துக் கொள்ள முடியாது. ஆகவே அரசு வீடுகளை கேஜ்ரிவால் தவிர்ப்பதாகச் சொல்வது சிவப்பு விளக்குச் சுழச் செல்வது போன்ற ஒரு விளம்பரம் மட்டுமே. அதனால் அவர் எதையும் சேமிக்கப் போவது கிடையாது மாறாக மந்திரிகள் இருக்கும் வீடுகளின் அக்கம் பக்கத்தினருக்கு அநாவசியமான தொந்தரவுகளே. அது தேவை கருதி அளிக்கப் படுவது. ஆனால் அதைப் பெறுபவர்கள் பலரும் திருப்பிக் கொடுப்பதில்லை. அந்த போக்கை மாற்றலாம். பதவி விலகும் பொழுது வீட்டை அதே நிலையில் திருப்பி அளிப்பதைக் கடைப் பிடிக்கலாம்.

அடுத்து கேஜ்ரிவால் பஸ்ஸிலும் ட்ரெயினிலும் அலுவலகம் செல்வது பற்றி. இது மற்றுமொரு தேவையில்லாத வெட்டி பந்தா மட்டுமே. அரசாங்கம் அளிக்கும் கார்களில் சென்று வந்து நேரத்தை மிச்சம் பிடித்து உருப்படியான வேலைகளில் கவனம் செலுத்தலாம். ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் போன்றோர் ஜனதா காலத்தில் சைக்கிளில் சென்றார்கள். அதனால் உருப்படியாக நடந்தது எதுவும் இல்லை. வீண் பாப்புலாரிடி ஸ்டண்டுகள் மட்டுமே. இதை பிற மாநில அமைச்சர்கள் கடைப் பிடிக்கத் தேவையில்லை. கூடுமானவரை டிராஃபிக்கை நிறுத்தாமல் அமைதியாக சென்று வருவதே தேவையானது.

மேலும் கேஜ்ரிவாலின் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது. அவர் நடந்து கூட போகலாம். ஏனென்றால் மாவோயிஸ்டுகளின் ஒரு முகமூடிதான் அவர். ஆகவே பிற மந்திரிகளுக்கு குண்டு வைக்கும் அதே மாவோயிஸ்டுகள் இவரைப் பாதுகாப்பார்கள். மேலும் டெல்லியில் குண்டு வைக்கும் ஜிஹாதிகளும் இவருடைய நண்பர்கள். அவர்களுடைய ஆதரவை கேட்டு வாங்கிதான் ஜெயித்துள்ளார். ஆகவே இவருக்கு எந்த ஜிஹாதியும் குண்டு வைக்கப் போவதில்லை. ஆனால் ஒரு சாதாரண பிஜேபி கவுன்சிலர் கூட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் வாழ வேண்டியுள்ளது. ஆகவே பாதுகாவலர்கள் வேண்டாம் என்பதும் ட்ரெயினில் போவதும் கேஜ்ரிவாலுக்கு மட்டுமே சாத்தியமான பாப்புலாரிடி ஸ்டண்ட்கள். மற்ற அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக பி ஜே பியினருக்கு இந்த வசதி கிடையாது. மாவோயிஸ்டுகளும் ஜிஹாதிகளும் அவர்களது உயிருக்கு குறி வைத்துக் காத்திருக்கிறார்கள். ஆகவே இதை கேஜ்ரிவால் செய்வதில் அவருக்கு எந்த விதமான பெருமையும் கிடையாது.

எளிமையாக இருப்பதும் அனைவரும் அணுகுமாறு நடந்து கொள்வதையும் ஏற்கனவே கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் உட்பட பல்வேறு பி ஜே பி மந்திரிகள் செய்து வருவதுதான். ஆனால் பத்திரிகைகள் கேஜ்ரிவால் பல் தேய்ப்பதை மட்டுமே எளிமை என்று பாராட்டுகிறார்கள்.

பிற மாநில முதல்வர்களும் அமைச்சர்களும் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது எளிமையைக் கடைப் பிடிக்க வேண்டும் அதற்கு மனோகர் பரிக்கர்களும், கேஜ்ரிவால்களும் முன்னுதாரணமாக இருக்கட்டும். இந்த எளிமை என்பதே ஒரு விதமான ல்க்சுரி. அதை அனைவராலும் பின்பற்ற இயலாத பல கட்டாயங்கள் உள்ளன. மோடியினால் பாதுகாப்பை தவிர்க்க முடியாது. உலகிலேயே அதிக பட்ச அச்சுறுத்தல் உடைய தலைவர் அவர். ஆக எளிமை என்பது அவர்கள் அரசு செயல்படும் விதத்தில் அமைய வேண்டுமே அன்றி போலீஸ் பாதுகாப்பைத் தவிர்ப்பதில் அல்ல. அது முடியும் பட்சத்தில் செய்யலாம்.

Leave a Reply