இளம்பெண் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்று சத்தீஷ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கட்டிடக்கலை வல்லுனரான ஓர் இளம் பெண் உளவு பார்க்கப்பட்டதாக காங்கிரசும் அதன் ஏவல் அதிகாரிகளும் அவதூறு பரப்பி வருகின்றனர் . இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது

இந்நிலையில், மத்தியரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள சத்தீஷ்கர் மாநில முதல்மந்திரி ராமன்சிங், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் நடந்து முடிந்த மாநில சட்ட சபை தேர்தல்முடிவுகள் போன்றவற்றால் நரேந்திரமோடிக்கு எதிராக கீழ்தரமாக அரசியல் செய்வதாகவும், மத்திய அரசின் இந்நடவடிக்கை மாநிலங்களை இழிவுபடுத்தி , மாநில அதிகார வரம்புக்குள் அத்துமீறி, மத்திய அரசு இந்தநடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply