“குஜராத் கலவரத்துக்காக முதல்வர் நரேந்திரமோடி மீது அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும்” என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது :

மோடி மீது 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவதூறுப்பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவரிடமும் நாட்டிடமும் காங்கிரஸ்கட்சி மன்னிப்பு கேட்கவேண்டும். குஜராத் கலவரவழக்கில் மோடி நிரபராதி என்பதை நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அவசர நிலைக்கால மனப்பான்மை அதற்கே பாதகமாக மாறும் என்றார்.

Leave a Reply