பாஜக. கூட்டணியில் தேமுதிக.வும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறோம். அப்படி இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம். என்று பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தகவல்தொழில்நுட்ப துறையினர் உள்பட 600 பேர் பாஜக.வில் இணையும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது.

பின்னர், நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகமக்களின் உணர்வுகளில் பாஜக. கலந்துவருகிறது. அதனால் தான் நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் பாஜக.வில் இணைகின்றனர். நாடாளுமன்ற தேர்தல்பணிகளை தொடங்கிவிட்டோம். ‘வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை’என்ற பிரச்சார யாத்திரையை இதுவரை நான்காயிரம் கிராமங்களில் நடத்தி முடித்துள்ளோம். கடந்த 22ம் தேதியுடன் முடிவதாக இருந்த இந்தயாத்திரை, ஜனவரி 12ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் 10 ஆயிரம் கிராமங்களில் யாத்திரையைமுடிக்க திட்டமிட்டுள்ளோம்.

கட்சியின் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சிமுகாம், ஜனவரி 3ம் தேதி திருச்சியில் நடக்கிறது. மீனவர்கள் பிரச்சினையை மையப் படுத்தி, ஜனவரி 31ம் தேதி, கடல்தாமரை போராட்டம் நடத்தப்படும். இதில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும் பாஜக.வின் பல்வேறு அணிகள் சார்பில், மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பல்வேறுபோராட்டங்கள் நடத்தப்படும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக. வெற்றிபெற்று, நரேந்திரமோடி பிரதமராக வரவேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். அவ்வாறு விரும்பும் அரசியல்கட்சிகள், பாஜக. அணியில் இணைய உள்ளன. தேமுதிக.வும் எங்கள் கூட்டணிக்குல் வரவேண்டும் என்று விரும்புகிறோம். அப்படி இணைந்தால் மகிழ்ச்சியடைவோம்.

பாஜக. பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி, வரும் பிப்ரவரியில் தமிழகம் வரவுள்ளார் இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply