நரேந்திரமோடி பிரதமராகவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.,வில் மீண்டும் இணைகிறேன், ஷிகாரி புராவில் நடைபெறும் இந்தக்கூட்டமே க.ஜ.க.,வின் கடைசிக்கூட்டம் என கர்நாடக ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்

கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம், ஷிகாரி புராவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற க.ஜ.க செயல் வீரர்கள் கூட்டத்தைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது:

ஷிகாரி புராவில் நடைபெறும் இந்தக்கூட்டமே க.ஜ.க.,வின் கடைசிக்கூட்டம். சங்கராந்திக்கு பிறகு, பா.ஜ.க.,வில் மீண்டும் இணைவேன்.

நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.,வில் மீண்டும் சேருகிறேன். கர்நாடகத்தில் ஐந்து ஆண்டுகளும் நான் ஆட்சிசெய்திருந்தால், குஜராத்தை காட்டிலும், நமதுமாநிலம் முன்னேற்றம் அடைந்திருக்கும் என்றார் அவர்.

Leave a Reply