காங்கிரஸ் ஆட்சியில்தான் மதக் கலவரங்கள் நடக்கின்றன என முன்னாள் பிரதமரும், ம.ஜ.த தேசியத் தலைவருமான தேவகௌடா தெரிவித்துள்ளார்

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

சிக்மகளூரில் சனிக்கிழமை மதக் கலவரம் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியே இதற்குகாரணம். முன்பு எஸ்எம்.கிருஷ்ணா ஆட்சி காலத்தில் சிக்மகளூரில் மதவாதசக்திகள் தலை தூக்குவதற்கு அப்போதைய அமைச்சரேகாரணம். கர்நாடகத்தில் காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்குவருகிறதோ, அப்போதெல்லாம் மதக் கலவரம் நடப்பது வாடிக்கையாகி விட்டது. இந்து-முஸ்லீம் மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கி அரசியல் லாபம்பெற முயற்சிப்பது வெட்கக் கேடானது. உளவுத் துறைமூலம் மதவாதிகளை அடையாளம் கண்டு அடக்கவேண்டும். வீரேந்திர பாட்டீல் காலம் தொடங்கி காங்கிரஸ் ஆட்சியில்தான் மத கலவரம் தலை தூக்குகிறது. மதவாத சக்திகளிடம் காங்கிரஸ்மிதமாக நடந்துகொள்வதே இதற்கு காரணம் என்றார்.

Leave a Reply