இயற்கை வேளாண்விஞ்ஞானி நம்மாழ்வார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1937ஆம் ஆண்டு தஞ்சைமாவட்டம் கல்லணை அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராகவும், வேதியியல் உரங்களை பயன்படுத்துவதற்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுத்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வந்தார்.

மேலும் இயற்க்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவுமுறைகளுக்கு ஆதரவாக அவர் தொடர் பிரச்சாரம் செய்துவந்தார். இவை தமிழகத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வையும் தாக்கத்தையும் ஏற்ப்படுத்தியது என்பது உண்மையே .

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்துக்கு நம்மாழ்வார் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

Leave a Reply