போக்குவரத்து போலீசாரின் "அறிவு கெட்டத் தனத்தால்" ( கொஞ்சம் மரபு மீறிய சொல்தான்..ஆனாலும், கோபத்தின் வெளிப்பாடு)..உளுந்தூர் பேட்டையை அடுத்த ஷேக் ஹுசைன் பேட்டை அருகே 7 அப்பாவி உயிர்கள் அநியாயமாக பலியாகி இருக்கிறது..

இதை எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை..இப்படி " மடத்தனமாக" ( மீண்டும் மரபு மீறிய சொல்) போக்குவரத்து பொலிசார் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல..

சாலைகள் ஏதோ இவர்கள் அப்பன் வீட்டு சொத்து போலவும், 80 கி.மி, 100 கி.மி வேகத்தில் வரும் வாகனங்களை எந்த முன் தடுப்பு நடவடிக்கைகளும், ( வேகத்தடை–செக் போஸ்ட் தடை போல . )இல்லாமல், இடம் பொருள் ஏவல் பாராமல், திடீரென கையை காட்டி, ஓரங்கட்ட சொல்வதும், அதை எதிர் பாராத பின்னால் வரும் வாகனங்களில் உள்ளோர் பரலோகம் போவதும், தொடர்ந்து கொண்டிருப்பது நெஞ்சம் கனக்க வைக்கிறது,

போக்குவரத்து பொலிசாரின் "வாகனப்பரிசொதனை" என்கிற லஞ்ச நாடகத்தினால், இதுவரை எத்தனையோ, டாக்டர்கள், வக்கீல்கள், கலைஞர்கள், சிறார்கள், பெண்கள், அரசுஅதிகாரிகள், அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்..இருந்தும்கூட போலிஸ் மேலிடத்திலிருந்த, இப்படி செய்யாதீர்கள்" ..பரிசோதனை இடங்களை சரியாக தேர்வு செய்யுங்கள், என்ற எந்த வழிகாட்டுதலும், வந்ததாக தெரியவில்லை..

பொலிசார் எந்த காலத்திலும், சொந்த புத்தியோடு செயல் பட்டதாக தெரியவில்லை..வழிகாட்டுதல்கள் வந்தாலாவது மாறுவார்களா? என்கிற ஆதங்கம்தான் இப்படி எழுத துண்டியது..

நகராட்சி, மாநகராட்சி, பகுதிகளிலும்,வாகன பரிசோதனைகளுக்கு சரியான இடம் தேர்வு செய்யாமல் , முக்குகளில் மறைந்து நின்று, சினிமா வில்லன் போல திடீரென் தோன்றி, கையைக்காட்டி நிறுத்தி, சாலைகளை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு பெரும் இடையுறு செய்து, முடிந்த அளவுக்கு விபத்து ஏற்படுத்தும் பொலிசாரின் செயல்களை யார் தடுப்பது?–அந்த "மரமண்டைகளுக்கு" ( மீண்டும் மறு மீறிய சொல்)யார் புத்திமதி சொல்வது?–

நேற்று முன்தினம் உளுந்தூர் பேட்டை விபத்து, நெஞ்சை உலுக்குகிறது..நெடுஞ்சாலையில் அதிவேக மாக வந்த வாகனத்தை மடக்கி நிறுத்தி, தீவிரவாதிகளை கைது செய்யப்போகிறார்களா?–கொள்ளையனை பிடிக்கப்போகிரார்களா?–மணல் லாரியிலிருந்து 100 ரூபாய் லஞ்சம் வாங்க கையை நீட்டி, 7 அப்பாவி உயிர்களை அநியாயமாக கொன்று விட்டார்களே ..

இந்த உயிர்பலிக்கு காரணமான பொலிசார் மிது கொலைவழக்கு போடவேண்டும்..ம்ம்ம்..ஹூம்…ரொம்ப கோபப்படுகிறேன் நான்.—-.ஒரு பிஸ்கோத்தும் நடக்காது.."மெமோ" கூட கொடுக்கமாட்டார்கள்..

இதற்க்கு பின் என்னதீர்வு?–ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம்…பிளாக்கில்…"பொங்கி வழியலாம்"..அக்கம் பக்கம் பார்ப்பவரிடம் "குமுறலாம்"'..சொந்தக்காரகளாக இருந்தால் "போலிஸ் ஸ்டேஷனை முற்றுகை " இடலாம்..

வேறென்ன செய்யமுடியும்..எத்தனை "புலம்பினாலும்" எந்த போலீசுக்கும் "புத்தி வரப்போவதில்லை"..எந்த மேலதிகாரியும் ஆணை இடப்போவதில்லை..

நம் தலைவிதி இவ்வளவுதான்…பிரேக் பிடிக்காத வண்டி , போலிஸ் மேல் மோதினால்தான் திருந்துவார்களோ?–ம்ம்..ஹூம்…அப்போதும் கேஸ் போடுவார்கள்.".கேஷ் " கேட்பார்கள்..திருந்தவே மாட்டார்கள் ..?–.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply