தேசத்தின்மீது ஆழ்ந்த பற்றுதலும், பக்தியும்கொண்ட தலைமையை தேசம் எதிர்நோக்கி இருக்கும்வேளையில் இந்தபுத்தாண்டு தொடங்குகிறது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புத்தாண்டையொட்டி வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தேசத்தின்மீது ஆழ்ந்த பற்றுதலும், பக்தியும்கொண்ட தலைமையை தேசம் எதிர்நோக்கி இருக்கும் வேளையில் இந்தபுத்தாண்டு தொடங்குகிறது’ மேலும் புதுச்சேரி மக்களின் நல்வாழ்விற்கு தொடர் தொல்லை கொடுத்தவர்கள் தொலைந்துபோவார்கள் என்ற நம்பிக்கை விதை இந்த ஆண்டில் வந்திருக்கிறது. ஆதிக்கசக்திகளின் தொல்லைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான காலம் கனிந்திருக்கிறது’ என்று நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாகவும் , காங்கிரசை எதிர்க்கும் விதமாகவும் தனது புத்தாண்டு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply