கர்நாடகத்தில் எடியூரப்பா வருகையினால் பா.ஜ.க.,வுக்கு கூடுதல்பலம் கிடைத்துள்ளதாகவும், இதையடுத்து வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைப்பெறும் என்று முன்னாள் துணை முதல்வர் கே.ஈஸ்வரப்பா கூறியுள்ளார் .

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரே சுவரர் திருக் கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனத்துக்காக செவ்வாய்க் கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கர்நாடகத்தில் பா.ஜ.க இரு பிரிவானதால் வாக்குகள்சிதறின. இதனால் காங்கிரஸ்கட்சி கடந்த சட்டப் பேரவையில் வெற்றிபெற்றது. ஆனால், தற்போது நாடெங்கும் நரேந்திரமோடி அலை வீசுகிறது. ஆகவே, நரேந்திரமோடியை பிரதமராக்கும் வகையில் எடியூரப்பா மீண்டும் தாய் கட்சியில் நிபந்தனை ஏதுமின்றி இணைகிறார்.

எடியூரப்பாவின் வருகையால் பா.ஜ.க கூடுதல் பலம்பெற்றுள்ளது. ஆகவே, வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகத்தில் 28 மக்களவை தொகுதிகளில் குறைந்தது 22 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும். நான்கு வடமாநிலத் தேர்தல்களில் காங்கிரஸூக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் நரேந்திரமோடியின் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. ஆகவே, வரும் மக்களவைத்தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார்.

Leave a Reply