இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.

அகஸ்டா வெஸ்ட் லேண்ட் என்ற இத்தாலிய நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடி மதிப்பில் விஐபி.,களுக்கான 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்செய்திருந்தது . இதில் மூன்று ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் கொடுக்கப்பட்டும் விட்டன.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தைப்பெற அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ரூ.360 கோடிவரை லஞ்சம் கொடுத்தது அம்பலமானது , இதனை தொடர்ந்து தேர்தல் காலத்தில் நல்லவர் வேஷம் போட்டு ஆகவேண்டுமே என்ற கட்டாயத்தின் பேரில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

Leave a Reply