தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் புதன்கிழமை இரவு சந்தித்துப்பேசினர்.

வரும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.,வுக்கு மாற்றாக 3ஆவது அணியமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அதற்காக தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது .

இந்தநிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் புதன் கிழமை இரவு தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.மோகன் ராஜுலு உள்ளிட்டோர் சந்தித்துப் பேசி உள்ளனர்.

அந்த சந்திப்பின்போது பாஜக கூட்டணியில் இணையுமாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், இந்தச்சந்திப்பு மகிழ்ச்சி தரும் வகையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply