டெல்லியில் உள்ள சொகுசுஹோட்டலில் வைத்து தொழில் அதிபர் ஒருவர் ஆம் ஆத்மிகட்சி மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளார் . டெல்லியில் உள்ள அரசு ஆம் ஆத்மி கட்சியுடையதல்ல. அது காங்கிரஸ் கட்சியுடையது என பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, டெல்லியில் உள்ள சொகுசுஹோட்டல் ஒன்றில் வைத்து பெரியதொழில் அதிபர் ஒருவர் ஆம் ஆத்மிகட்சி மற்றும் காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்திகொடுத்துள்ளார்.

பாஜக ஆட்சி அமைப்பதை தடுத்துநிறுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோள் . டெல்லியில் உள்ள அரசு ஆம் ஆத்மி கட்சியுடையதல்ல. அது காங்கிரஸ் கட்சியுடையது. ஆம் ஆத்மிகட்சியும், காங்கிரஸும் நாணயத்தின் ஒரேபக்கத்தில் உள்ளன. அவர்களின் கூட்டணியை எதிர்த்து பாஜக போராடவேண்டும். போராடி டெல்லியில் உள்ள 7 லோக் சபா சீட்களையும் கைப்பற்றுவோம்.

எந்தகட்சியின் ஆதரவையும் எதிர்பார்க்கமாட்டோம் என்று தனதுமகன் மீது சத்தியம் செய்தவர்தான் தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் முதல்வர் ஆகியுள்ளார். கெஜ்ரிவால் பதவியேற்ற போது காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த யாருமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதுதான் காங்கிரஸின் நிலைப்பாட்டிற்கு உதாரணம் என்றார்.

Leave a Reply