உ.பி.,யின் பரேலியில் வரும் 13ம்தேதி நரேந்திரமோடி தலைமையில் நடைபெறுவதாக இருந்த பொதுகூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இந்தியா முழுவதும் தீவிர தேர்தல்பிரசாரத்தை தொடங்கி மேற்கொண்டு வருகிறார். உ.பி.யில் பரேலி, கோரக்பூர், மீரட் மற்றும் லக்னோவில் பொதுகூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிந்தார். வரும் 13ம்தேதி விஜய்சங்கானந்த் என்ற பெயரில் பரேலியில் மோடி தலைமையில் பிரமாண்டபேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென இந்தக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உ.பி.மாநில பாஜக செய்திதொடர்பாளர் பகதூர் பதக் கூறுகையில், வரும் 13ம்தேதி பரேலியில் ஹசரத்ஷா சராபாத் மியான் தர்கா ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதனால் பாஜக கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றார்.

மேலும் விஜய் சங்கானந்த் பேரணி லக்னோவில் மார்ச் 2ம்தேதி நடைபெறும் என்றார். உ.பி.,யில் வரும் 23ம் தேதி கோரக்பூரிலும், பிப்ரவரி 2ம்தேதி மீரட்டிலும், மார்ச் 2ம்தேதி லக்னோவிலும் மோடி பேச இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply