தமிழகத்தில் மது விற்பனையை ஒரு பக்கம் ஊக்கப்படுத்தி கொண்டே மருபக்கம் ஏன் இலவசங்களை தரவேண்டும் , வேறொரு பக்கத்தில் இலவசங்களை எதற்கு வழங்க வேண்டும் அரசு தரும் இலவசம் எல்லாம், மக்களின் வரிப்பணம் தான் என்று பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ஓடக்காடுபகுதியில், புதிதாக திறக்கப்பட்ட பாஜக. மாவட்ட அலுவலகத்துக்கு வியாழக் கிழமை வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் எந்தத்துறையிலும் முன்னேற்றம் இல்லை.குஜராத்தை தவிர பெருவாரியான மாநிலங்களில் மதுவிற்பனை நடைபெறுகிறது.

மதுவிற்பனையை பிரதான ஆதாரமாகக் கொண்டிருப்பது தமிழகம் தான். கடந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கு 180 கோடி விற்பனையானது. தற்போது, 270 கோடியாக உள்ளது.

தமிழகத்தில் மதுவிற்பனையை ஊக்கப்படுத்தி, வேறொரு பக்கத்தில் இலவசங்களை எதற்குவழங்க வேண்டும்? அரசுதரும் இலவசம் எல்லாம், மக்களின் வரிப் பணம். அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலவசத்துக்காக மதுக் கடைகளா? என கேள்வி எழுப்பினார்

Leave a Reply