கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் பாஜக.வில் இணையபோவதால் கர்நாடகத்தில் பாஜக மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறுகிறது.

எடியூரப்பா சமீபத்தில் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மீண்டும் பா.ஜ.க.,வில் இணைவதாக அறிவித்தார்.இந்நிலையில் எடியூரப்பா தனது எம்எல்ஏ.க்களுடன் சட்ட சபை கட்டிடத்துக்கு சென்றார். சபாநாயகர் காகோடு திம்மப்பாவை சந்தித்து பா.ஜ.க.,வில் இணைவதற்கான கடிதம்கொடுத்தார்.

அதில் தானும் தனதுகட்சி எம்எல்ஏ.க்கள் 6 பேரும் கட்சியை கலைத்துவிட்டு பாரதிய ஜனதாவில் இணைந்து விட்டோம். இனி எங்களை பாரதிய ஜனதா எம்எல்ஏ.க்களாகவே கருத்தில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் கர்நாடக சட்ட சபையில் பா.ஜ.க.,வின் பலம் 40–ல் இருந்து 46 அக உயர்ந்தது. தற்போது 40 எம்எல்ஏ.க்கள் கொண்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply