ஊழல் புகாரில் சிக்கிய ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது.

வீரபத்ர சிங்கை கைதுசெய்து அழைத்துச் செல்வதுபோல் வேட மணிந்து சென்ற அவர்கள், ஊழல் புகார்குறித்து சிபிஐ விசாரிக்க வலியுறுத்தினர். கட்சியினர் மீதான ஊழல்புகார் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். ஹிமாச்சலப்பிரதேச முதலமைச்சர் பதவியிலிருந்து வீரபத்ர சிங்கை உடனடியாக நீக்கக்கோரியும் பாஜக.,வினர் முழக்கமிட்டனர். தனியார் நிறுவனத்திடம் இருந்து முறைகேடாக பணம்பெற்றார் என்பது வீரபத்ரசிங் மற்றும் அவரது மனைவி மீதான புகாராகும்.

Leave a Reply