டார்ஜிலிங் பிரச்சினைக்கு பதிலாக அதற்கு யூனியன்பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்கவேண்டும், என பாஜக.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் வலியுறுத்தியுள்ளார்.
.

கோல்கட்டாவில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜஸவந்த் சிங் பேசியதாவது: டார்ஜிலிங் பிரச்சினைக்கு பதிலாக அதற்கு யூனியன்பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்கவேண்டும், என கூறினார்.டில்லி மற்றும் கோல்கட்டாவில் வங்காளிகள் உள்ளனர்.

இருப்பினும் டில்லியில் உள்ள வங்காளிகள் நிரந்தரமாக வங்க தேசத்தில் வங்காளிகள் என அடையாளம் காட்ட இயலாது என்றார்.கூர்க்கலாந்து தனிமாநிலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அதற்கு மாநில அந்தஸ்துக்குபதில் யூனியன் அந்தஸ்து அளிப்பதுதான் சிறந்தது என்று எனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தேன் என்று விளக்கினார்.

சிக்கிம் ,டார்ஜிலிங் இணைக்கப்பட்டது என்றால் அது ஒரு நீண்ட கால செயல் முறை ஆகும்.இருந்தாலும் வேறு வழிஇல்லை.டார்ஜிலிங்கிற்கு முதலில் நீங்கள் யூனியன்பிரதேச அந்தஸ்து பெற்று முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும் என்றார். ஒரு மாவட்டத்தில் ஒரு அரசு அமைக்கவேண்டாம் என்கிறார்.1947 ஆம் ஆண்டு கர்சன்பிரபுவின் காலத்தில் வங்க பிரிவினை போன்று மீண்டும் அங்கு பகிர்வு இருக்கிறது. வங்க பிரிவினையால் பல ஆண்டுகள் அதன்பாதிப்பு ஏற்படுத்தியது. இவ்வாறு ஜஸ்வந்த்சிங் பேசினார்.

Leave a Reply