ராமேஸ்வரம் பாம்பன்பகுதியில், இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்துதாக்குவதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கடல் தாமரை போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கு பா.ஜ.க லோக்சபா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குவார் என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நடந்த இனப் படுகொலையை தமிழகமக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனக்கு பக்கபலமாக இருந்த ஒரேகாரணத்திற்காக தமிழர்களை மொத்தமாக கொன்றுகுவித்தது இலங்கை அரசு.

தமிழகத்தில் லோக்சபாதேர்தல் கூட்டணியை பொறுத்த வரை பா.ம.க.,வுடன் பேசிவருகிறோம். ம.தி.மு.க.,வுடன் ஏற்கனவே பேசிவிட்டோம். அக்கட்சி பா.ஜ.க.,வுக்கு ஆதரவு அளிக்கிறது. தே.மு.தி.க.,விடமிருந்து சாதகமானபதிலை எதிர்பார்க்கிறோம். கேப்டன் சரியானநேரத்தில் சரியானமுடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஜனவரி மாத மத்தியில் சென்னைக்கு விஜயம்செய்வார். லோக்சபா தேர்தலுக்கு தமிழக பாஜக தீவிரமாக தயாராகிவருகிறது. விரைவில் அனைத்து நடை முறைகளையும் முடிப்போம். பிப்ரவரி மாதத்தில் இது முடிவடையும். மார்ச் மாதத்திலிருந்து இன்னும் வேகம்பிடிக்கும் என்றார் .

Leave a Reply