இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்ட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன்?, வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யவோ, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ யாருக்கும் தைரியம்இல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி கேள்வி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருண் ஜேட்லி மேலும் தெரிவித்திருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியும், வீரபத்ரசிங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க பார்க்கின்றனர். அதற்குப் பின்னால் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் அமைதியாக ஒளிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். வீரபத்ர சிங்குக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யவோ, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவோ யாருக்கும் தைரியம்இல்லை.

இது தொடர்பாக முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யும்படி சி.பி.ஐ இயக்குநருக்கு டிசம்பர் 29ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

தில்லி சிறப்புபோலீஸ் சட்டப் பிரிவு 6ன்படி இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மாநில அரசின் அனுமதி தேவை எனக் கூறப்படுகிறது.

எனவே, இமாசலப்பிரதேச அரசு அனுமதி கொடுத்தால், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடக்கும். அனுமதிகொடுக்க மாநில அரசுக்கு தைரியம் உள்ளதா? என்று அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply