காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஆம் ஆத்மிகோருவது சரியல்ல , தேசிய பிரச்சனைகளில் ஆம் ஆத்மி தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் விரும்பினால் பொது வாக்கெடுப்பு நடத்தி ராணுவபாதுகாப்பை விலக்கிகொள்ளலாம் என்று ஆம் ஆத்மியின் அரசியல் ஆலோசகர் பிரகசாந்த் பூஷண் தெரிவித்தார். இதற்கு நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில் காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவத்தை திரும்பபெறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஆம் ஆத்மி கோருவது சரியல்ல என்றார். மேலும் தேசியபிரச்சனைகளில் ஆம் ஆத்மி தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply