அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாஜக.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடிக்கு ஆதரவாக தொலைபேசியிலும் நேரிலும் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்கா வாழ் பாஜக.வெளிநாட்டு நண்பர்கள்’ அமைப்பின் தலைவர் சந்திர காந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவை தேர்தலில் பாஜக.வின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திரமோடிக்கு தொலை பேசி மூலம் ஆதரவுதிரட்ட முடிவு செய்துள்ளோம். இதன் முலம், ஒவ்வோர் உறுப்பினரும் தங்கள் உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் குறைந்த பட்சம் 200 பேரிடமாவது தொலைபேசி மூலம் ஆதரவுதிரட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், அறுதிபெரும்பான்மை பெறுவதற்கான 272 தொகுதிகளுக்கும் குறையாமல் பாஜக. வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எங்கள் அமைப்பின் உறுப்பினர்களில் பலர் நேரடியாக இந்தியாவுக்குவந்து பிரசாரம் மேற்கொள்ளவும் தயாராக உள்ளார்கள் ” என்றார்.

Leave a Reply