பாஜக கூட்டணிக்குவர விஜய காந்திற்கு விருப்பம் உள்ளது. அதற்காக, தொண்டர்களின் கருத்தைகேட்க, அவர் காத்திருக்கிறார், என்று பாஜக ., மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே, மீனாட்சியா புரத்தில் நடந்த, பாஜக.,வின், வீடு தோறும் மோடி; உள்ளம் தோறும் தாமரை யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிராமங்களில் உள்ள பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுகிறோம். டாஸ்மாக்கடை பிரச்னை, மின்சப்ளை, நீர் நிலை ஆக்கிரமிப்பு, மகளிர் சுய உதவிக்குழு, 100 நாள் வேலைதிட்டம் உள்ளிட்ட, 36 தகவல்களை சேகரிக்கிறோம்.

இந்தபட்டியலை, பாஜக, மாநில தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி, பதிவுசெய்ய உள்ளோம். லோக்சபா தேர்தலில், பாஜக., கூட்டணிக்கு வர, தேமுதிக., தலைவர் விஜய காந்திற்கு விருப்பம் உள்ளது. அதற்காக, தொண்டர்களின் கருத்தைகேட்க, அவர் காத்திருக்கிறார். வலுவான கூட்டணி அமைத்து, வெற்றிபெறுவோம், என்றார்.

Leave a Reply