பாஜக பிரதமர்வேட்பாளர் மோடியுடன் ராகுல் காந்தியை ஒப்பிடக்கூடாது என பிரபல ஹிந்தி நடிகரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சத்ருகன்சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

பிகார் தலை நகர் பாட்னாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான பாஜக ஆலோசனைக்கூட்டத்தில் சத்ருகன் சின்ஹா கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நரேந்திரமோடிக்கு தற்போது நாடுமுழுவதும் செல்வாக்கு பெருகியுள்ளது. அவருடன் ராகுல்காந்தியை ஒருபோதும் ஒப்பிடக்கூடாது. குஜராத் மாநிலத்தில் மூன்று முறை தொடர்ந்து முதல்வராக மோடி வெற்றிபெற்றுள்ளார். அந்த மாநிலத்தில் அவர் நல்லாட்சி நடத்திவருகிறார் என்றார்

Leave a Reply