நாடுமுழுவதும் பாஜக.விற்கு ஆதரவான அலை வீசிவருவதாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார். டெல்லி விஞ்ஞான்பவனில் வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே பேசிய மோடி, மக்களவை தேர்தலுக்குப்பின் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது : என்ஆர்ஐ.,க்கள் நாட்டின் முதலீட்டை குறைக்க வில்லை; ஊழல், முறைகேடுகள் உள்ளிட்டவை நாட்டின் அத்யாவசிய நடைமுறைகளையே மாற்றி உள்ளது; கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் அரசியல் கீழ் நிலைக்கு சென்றுள்ளது;

2014 லோக் சபா தேர்தலுக்கு பின் மத்தியில் பாஜக., தலைமையிலான ஆட்சி அமையும்; மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான தரம்தாழ்ந்த அரசியல், நாட்டின் வளர்ச்சியைபாதித்து வருகிறது; பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் சிறப்பான அரசு நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது;

நாட்டின் ஒற்றுமையை உணர்த்துவதற்கு எடுத்துக் காட்டாகவே சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது; இந்தசிலையை நிர்மாணிக்க என்.ஆர்.ஐ.க்கள் உதவவேண்டும்; என்.ஆர்.ஐ.,க்கள் மாநில அரசுகளுடன் நேரடி ஒப்பந்தம்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்;

மத்திய அரசு மீது கவனம் செலுத்துவதைவிட மாநில அரசுகள் மீது கவனம் செலுத்துங்கள்; ஒற்றுமைக்காக பாடுபட்டால் நிச்சயம் வெற்றிகிடைக்கும்; பிரதமர் சரியாகதான் கூறி இருக்கிறார்; அவர் கூறியதுபோல் சிறந்த ஆட்சி விரைவில்வரும்; அதற்கு இன்னும் 4 முதல் 6 வாரங்கள் பொறுத்திருங்கள்; தேசியவளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; தேசிய ஒற்றுமையே முக்கியம். இவ்வாறு நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply