கர்நாடகத்தில் பா.ஜ.க.,விலிருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய எடியூரப்பா, அண்மையில் க.ஜ.க.,வை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார்.

இதனிடையே, பெங்களூரு மல்லேஸ் வரத்தில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்றுகாலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அதிகாரப் பூர்வமாக பாஜக.,வில் இணைகிறார்.

அவருடன் கஜக எம்எல்ஏ.க்கள் யூ.பி.பானகர், விஸ்வநாத் பாட்டீல், குருபா தப்பா நாக மரப்பள்ளி, அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தனஞ்செய்குமார், சிஎம்.உதாசி, ஷோபா கரந்தலஜே, ரேணுகாச் சார்யா உள்ளிட்டோரும் பாஜகவில் இணைகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தில்லியில் வருகிற 18-ஆம்தேதி நடைபெறவுள்ள பாஜகவின் தேசியசெயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் எடியூரப்பா, பாஜக .,வின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, நரேந்திரமோடி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேசுகிறார்.

Leave a Reply