நடிகர் நடிகைகளுக்காக ஏழு தனி விமானங்களை பயன்படுத்தி நடன விழா என்ற போர்வையில் சமாஜ்வாதி கட்சி அரசு பணத்தை விரயம் செய்வதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது
ஆளும் சமாஜ் வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் சொந்த ஊரான சாய்பாயில் இந்த திருவிழா நடைபெற்றது. சல்மான் கான், மாதுரிதீட்சித், மல்லிகா ஷெராவத், சோகா அலி கான், சாராகான் என இந்தி திரையுலகத்தின் முக்கிய நட்சத்திரங்கள் இந்தவிழாவில் பங்கேற்றனர்.
இவர்களுக்காக உத்தரபிரதேச அரசு செலவில் 7 விமானங்கள் வாடகைக்கு இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடன திருவிழாவில், முதலமைச்சர் அகிலேஷ்யாதவ், கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அமைச்சர்கள், எம்பி.,க்கள், எல்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
முஸாபர்நகர் மதகலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தவித்து வரும் சூழலில், பலகோடி ரூபாய் செலவில் நடிகர் நடிகைகளை அழைத்துவந்து திரு விழா நடத்துவதாக அகிலேஷ் அரசு மீது எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.