தமிழக மீனவர்கள் பிரச்சினைக்காக பாஜக மீனவர் அணிசார்பில் ஜனவரி 31ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள கடல்தாமரை போராட்டத்துக்கு ஒரு லட்சம் பேர் வரை திரட்ட பாஜக திட்டமிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் மீனவர்களுக்கான சிறப்புத்திட்டங்களை அமல்படுத்தாத மத்திய அரசைக்கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஜனவரி 31ம்தேதி பா.ஜ.க மீனவர் அணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 'கடல் தாமரைப் போராட்டம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது . இதில் அதிகளவில் மீனவர்களை கலந்துகொள்ள வைப்பதற்காக மீனவர் அணியைச்சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மீனவ கிராமங்களில் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளனர்.

Leave a Reply