தனது கர்நாடக ஜனதா கட்சியை பா.ஜ.க.,வுடன் இணைத்த ஒருவாரம் கழித்து கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா பாஜகவில் முறைப்படிசேர்ந்தார்.

பா.ஜ.க.,வில் இருந்த எதியூரப்பா கடந்த 2012ம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அவர் கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார்.

பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை அறிவித்த பிறகு எதியூரப்பா தனது கட்சியை கடந்தவாரம் பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் கட்சியில் முறைப்படி இணைய ஒரு தேதியை முடிவுசெய்யுமாறு அவருக்கு பாஜக கோரிக்கைவிடுத்தது.

அதன்படி அவர் இன்று பா.ஜ.க.,வில் தன்னை முறைப்படி இணைத்துக்கொண்டார். பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த எதியூரப்பாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாகவரவேற்பு அளித்தனர். அவரை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

Leave a Reply