ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி ஆகியோர் பாஜக பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடிக்கு சவாலானவர்கள் அல்ல என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பாக போபாலில் செய்தியாளர்களிடம் சௌஹான் புதன் கிழமை கூறியதாவது: வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தியையோ அல்லது பிரியங்காவைவோ சவாலாக கருதமுடியாது.

ஏனென்றால், வரும் மக்களவை தேர்தலில் மோடிக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதை நாடுமுழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் பா.ஜ.கவை வெற்றிப் பெற்றச்செய்து மத்தியில் ஆட்சி அமைக்கவும், நரேந்திரமோடியை பிரதமராக்கவும் மத்தியப் பிரதேச பா.ஜ.க முழுவீச்சில் பணியாற்றும்.

இதற்காக மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றவேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று கூறினார்.

Leave a Reply