நரேந்திரமோடி பிரதமராவதை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலோ, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோ தடுக்கமுடியாது என சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று விருதுவழங்கும் விழாவில் ராமன் சிங் கலந்து கொண்டார்.இவ்விழாவில், அமிலவீச்சுத் தாக்குதலுக்குள்ளான லட்சுமி என்ற பெண்ணுக்கும், தொழு நோயாளிகளின் நலவாழ்வுக்காகப் பாடுபட்டுவரும் சமூக சேவகி கவிதா பட்டாராய்க்கு ஓஜஸ்வனி விருதை அவர் வழங்கினார். அமிலவீச்சுக்கு எதிராக லட்சுமி தொடர்ந்த பொது நலவழக்கின் மீது, சந்தையில் அமிலம் விற்பதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது நரேந்திர மோடி பிரதமராவதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலோ, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோ தடுக்கமுடியாது . லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நேரம் வந்து விட்டது.இந்நிலையில் தேர்தல் களத்தில் யார்வந்தாலும் மோடி பிரதமராவதை ஒன்றும் செய்து விட முடியாது என்றார்.

கடந்த லோக் சபா தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 11 லோக் சபா சீட்களில் 10ல் வெற்றிபெற்றது பாஜக., ஆனால் இம்முறை 11 சீட்களையும் பெற்றுவிடும் .இயற்கை எழில் அதிகம் உள்ள நகரமான இங்கு நான் 10 ஆண்டுகள் இருந்துள்ளேன். என் இனியநினைவுகள் மனதில் நீங்காமல் உள்ளன. போபால் நாட்டில் உள்ள தலை நகரங்களில் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது என்றார் முதல்வர் ராமன் சிங்.

Leave a Reply