ராகுல் காந்தியிடம் தலைமை பண்பு உள்ளதா? என பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது நேரு அல்லது இந்திராகாந்தி ஆகியோர் தங்களது தனிப்பட்ட குண நலன்களால் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வந்தனர். அது போன்று தலைமை பண்புகள் ராகுல்காந்திக்கு இருக்கிறதா?

தற்போதைய தலை முறையினருக்கு அந்த ஆற்றல் இல்லையென்றால், கட்சி சிதைந்துவிடும். தற்போதைய தலைமுறையினருக்கு பொதுமக்களை கவரும்திறன் போதிய அளவு இல்லை. இதனால் குடும்ப ஆதிக்கம் நிலவும்கட்சி ஒன்று மூழ்கிவிடும் அல்லது குடும்பத்துடன் சேர்ந்து தத்தளித்து கொண்டிருக்கும் என்று அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply