நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு தேவையான நிதியைத்திரட்டும் முயற்சியாக, இணையதளம் ஒன்றை பாஜக தொடங்கியுள்ளது.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக நிதியளியுங்கள் என்ற வாசகத்துடன் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் உட்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். பாஜக.,வுக்கு நிதியளிக்க விரும்புபவர்கள், இந்த இணைய தளத்தின் மூலம் ( http://donate.bjp.org) ஒருரூபாயில் இருந்து அதிகபட்சமாக ஒருலட்சம் ரூபாய் வரை நிதியளிக்கலாம் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார். மேலும், தனது சார்பாக ஆயிரம் ரூபாயை தேர்தல் நிதியாகவும் ராஜ்நாத்சிங் வழங்கினார்.

Leave a Reply