பாகிஸ்தானில் பதுங்கியுள்ள மும்பை நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான டெல்லி தொழிலதிபரிடம் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தடை விதித்தார் என மத்திய உள்துறை முன்னாள் செயலர், ஆர்கே.சிங் அதிரடிபுகாரை தெரிவித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார்.

ஆனால் இதுகுறித்து தொலைக் காட்சி ஒன்று பேட்டியளித்த முன்னாள் உள்துறை அதிகாரி ஆர்கே.சிங் டெல்லி போலீஸ்வசம் சிக்கிய தாவூத் இப்ராகிம் கூட்டாளியை தப்பவைத்ததே ஷிண்டேதான். கிரிக்கெட் பிக்சிங்புகாரில் சிக்கிய அந்த நபரிடம் விசாரணை நடத்தவிடாமல் போலீசை தடுத்த ஷிண்டே, இப்போது தாவூத் இப்ராகிமை பிடிக்க போகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply