பஞ்சாப் சீக்கிய பொற்கோவில் மீது இந்திராகாந்தி ஆட்சியில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்தின் உதவியை இந்தியா கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

1980களில் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் தனிநாடு அமைக்கவேண்டும் என்பதற்காக சீக்கியர்கள் ஆயுதமேந்தி போராடினர் . இந்த போராட்டத்தின் புகலிடமாகவும் , தர்காப்பிடமாகவும் போராட்டக்காரர்களால் பொற்கோவில் பயன்படுத்தப் பட்டது.

விடுதலை போராட்டத்தை ஒடுக்க பஞ்சாப்பொற்கோவில் மீது ஆபரேஷன் புளூஸ்டார் என்ற பெயரில் 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்

இந்நிலையில் இந்த ராணுவ தாக்குதலை நடத்த அப்போதைய இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி, இங்கிலாந்து அரசின் உதவியைகோரியதாக லண்டனில் உள்ள ஒரு இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீக்கியர்களின் பொற்கோயிலை தாக்க அப்போதைய இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட்தாட்சர் சிறப்பு விமானப் படையை கொடுத்து உதவிபுரிந்தார் என்றும் அந்த இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து நாட்டின் உதவியை நாடி இருக்கும்செய்தி அதிர்ச்சி தருவதாக பா.ஜ.க., தெரிவித்துள்ளது.

Leave a Reply