பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் குறைந்தபட்சம் மதிமுக., சார்பில் ஏழு எம்.பி.,க்கள் வெற்றிபெறுவது உறுதி என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .

மதிமுக.,பொதுச் செயலாளர் வைகோ, ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று தமது சொந்த ஊரான நெல்லைமாவட்டம் கலிங்கப்பட்டியில் பொதுமக்களை சந்திப்பதுவழக்கம். அதைப்போன்று அனைத்து சமுதாய தெருக்களிலும் நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார்.

வைகோ பேசுகையில், 'விரைவில் பார்லிமென்ட் தேர்தல்வருகிறது. பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறோம். போட்டியிடுவது எத்தனைதொகுதி என்பது இன்னமும் முடிவாகவில்லை. இருப்பினும் ம.தி.மு.க.,வில் இருந்து குறைந்தபட்சம் ஏழு எம்.பி.,க்கள் வெற்றி பெற்று பார்லிமென்ட் செல்வது உறுதி,' என்றார்.

Leave a Reply